Monday 2 July 2012

மூலிகைகள்

மூலிகைகள்

மூலிகைகளின் எண்ணிக்கை:

மூலிகைகளின் எண்ணிக்கை இருபது இலட்சம் என்று சித்தர்கள்
கூறியுள்ளதாகக் குன்றத்தூர் இராமமூர்த்தி குறிப்பிடுகிறார்.
அவை,


1. கற்ப மூலிகைகள் (Refuvemating Herbs)

2. ஞான மூலிகைகள் (Spiritual Herbs)

3. இரசவாத மூலிகைகள் (Alchemical Herbs)

4. வசிய மூலிகைகள் (Psychie Herbs)

5. மாந்திரீக மூலிகைகள் (Magic Herbs)

6. வழிபாட்டு மூலிகைகள் (Religious Herbs)

7. பிணி தீர்க்கும் மூலிகைகள் (Therapeutic Herbs)

8. உடல் தேற்றி மூலிகைகள் (Tonic Herbs)

9. உலோக மூலிகைகள் (Metallogenic Herbs)

10. வர்ம மூலிகைகள் (Chiropratic Herbs)

11. விஷ மூலிகைகள் (Toxic Herbs)

12. நஞ்சை முறிக்கும் மூலிகைகள் (Antidotes)

13. எலும்பொட்டும் மூலிகைகள் (Bone Sectors)

14. சதை ஒட்டும் மூலிகைகள் (Muscle Tones)

15. பச்சை குத்தும் மூலிகைகள் (Tattooing Herbs)

16. காதணி ஓம்பி மூலிகைகள் (Ear Boring Herbs)

17. பல்பிடுங்கும் மூலிகைகள் (Herbs for Dental Extraction)

18. கருச்சிதைவு மூலிகைகள் (Abortifacient Herbs)

என்று மூலிகைகள் வகைப்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.





வாத நூல்கள்:

வாதம் என்பது இரசவாதம் என்றும், இரசவாதம் என்பது உலோகங்களைப் பொன்னாக 
மாற்றுகின்ற கலை என்றும் பொருள்படும்.

இரசவாதம், இரசத்தை மூலப்பொருளாகக் கொண்டு செய்யப் படுகின்ற குருமருந்தை, நூற்றுக்கு ஒன்று என்ற அளவுக்குத் தாழ்ந்த உலோகங்களுடன் சேர்ந்து உருக்கினால், அந்த உலோகங்கள் பத்தரை மாற்றுத் தங்கம் போலாகும் என்பர்.

வாதக் கலையால் உலோகங்களைத் தங்கமாக மாற்றிக் கொண்டிருப்பது சித்தர்களின் நோக்கம் அன்று. செய்யப்படுகின்ற குருமருந்தானது சரியான முறையில் செய்யப்பட்டுள்ளதா? என்று சோதித்து அறியவே உலோகங்களுடன் சேர்த்து உருக்கிச் சோதிக் கின்றனர். குருமருந்தைச் சேர்த்தால், தாழ்ந்த உலோகம் பொன்னாக மாறுவதைப் போல, குற்றமுடைய உடலினர்க்குக் கொடுத்தால் அக்குருமருந்து, அவர்களைக் குற்றமற்ற உடலினராக மாற்றும். அதன் பின்னர் யோக நெறிநின்று நீண்ட காலம் உயிர் வாழலாம் என்பதே வாதத்தின் நோக்கமாகும்.

அவ்வாறான வாதக் கலையைக் கூறுகின்ற நூல்கள் பல காணப்படுகின்றன. அவை,


அகத்தியர் வாத சௌமியம் – 1200

அகத்தியர் இலக்க சௌமிய சாகரம்

கொங்கணர் வாத காவியம் – 3000

கருவூரார் வாத காவியம் –

சட்டைமுனி வாத காவியம் –

யாகோபு வாத காவியம் – 400

திருவள்ளுவர் வாத சூத்திரம் – 80

யூகி வாதாங்க தீட்சை – 300

யூகி வாத வைத்தியம் – 200

யூகி பிடிவாதம் – 1000

யூகி வாத உலா – 1000

யூகி வாத கும்மி – 1000

யூகி வாத காவியம் – 2000

No comments:

Post a Comment